ஓடும் பஸ்ஸில் பலாத்கார முயற்சி! குதித்து பலியான மகள்! படுகாயமடைந்த தாய்!

Must read

சண்டிகர்:
ண்டக்டரின் பலாத்கார முயற்சியிலிருந்து தப்பிக்க ஓடும் பஸ்ஸில் இருந்து தாயும் மகளும் குதித்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம்  மோக மாவட்டத்தில் தனது 14 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் பேருந்தில் பயணம் செய்தார் ஒரு பெண்மணி. பேருந்தில் குறைவான பயணிகளே இருந்தனர்.
sexualcrime_liveday-copy
மோகா நகர் அருகே பேருந்து சென்று கொண்டு இருக்கும்போது, அந்த பேருந்தின் இரு கண்டக்டர்களில் ஒருவர் அப்பெண்ணிடமும் அவரது மகளிடமும் தகாத முறையில் நடந்து கொண்டார்.
இதனால் பயந்துபோன பெண்மணி, பேருந்தை நிறுத்துமாறு டிரைவரிடம் முறையிட்டார். ஆனால் டிரைவர் பேருந்தை நிறுத்தவில்லை. மற்ற பயணிகளும் கண்டக்டரின் மோசமான நடத்தையை தட்டிக்கேட்கவில்லை.
பல முறை அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்தும் கண்டக்டர் கேட்பதாக இல்லை. இதனால் பொறுமையிழந்த அந்த பெண்மணி, ஒடும் பேருந்தில் இருந்து தனது மகளை முதலில் தள்ளிவிட்டார். பிறகு அவரும் கீழே குதித்துவிட்டார். அவரது மகன் மட்டும் பேருந்தில் இருந்தான்.
sexualcrime_liveday
பலத்த காயம் அடைந்த தாயும் மகளும் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி 13 வயது மகள், உயிரிழந்தார். அந்த பெண்மணிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் நடைபெற்ற பேருந்து, பஞ்சாப் முதல்வர் சுக்பிர் பாதலுக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்தது என்றும், மற்றொரு நிறுவனத்திற்கு அது லீசுக்கு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது டிரைவரும், கண்டக்டரும் தலைமறைவாகிவிட, காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article