சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

Tamil Nadu Govt Rs. 752 crore allocated for local bodies for basic developmentதமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவடைந்து, உள்ளாட்சி பிரதிநிதிகளால் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை மாநில அரசு வழங்கி வருகிறது. ஏற்கனவே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதன்மூலம்  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.