தமிழகஅரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் இல்லை! மத்தியஅரசு கைவிரிப்பு

டில்லி,

மிழகத்திற்கு நீட் விலக்கிற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையின்போது மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர்,

தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கைவிரித்து விட்டதால், தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்துள்ளது.

நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக அமைச்சர்கள் மத்திய அரசிடம் பலமுறை வலி யுறுத்தினர். முதல்வரும் பலமுறை டில்லி சென்று பிரதமரை வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்த கருத்தை தொடர்ந்து, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி, அதற்கு  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு பெற வழிவகை செய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் சமர்பித்தது.

இந்த  அவசர சட்ட முன்வடிவுக்கு மத்திய சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், தமிழகத்துக்கு எதிராக வழக்கு தொடுத்ததன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணையை இன்று (22ந்தேதி)  தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் இன்றைய விசாரணையின்போது, மத்திய அரசு தனது நிலையில் இருந்து பின்வாங்கி, தமிழக மாணவர்களை வஞ்சிக்கும் வகையில், தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே, தமிழகத்துக்கு விலக்கு அளிக்க முடியாது என்றும்,   தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government's 'neet' ordinance does not endorse! Central government