சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில்,  சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு, 8 லட்சம் கான்கிரீட் வீடுகள், ஆழ்கடல் அகழ்வாய்வு, வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு மற்றும் சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ₹100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முதல்முறையாக இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையில், “இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது. 100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு!

வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்

சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ₹500 கோடி ஒதுக்கீடு

  சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ₹100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்

நாமக்கல்லில் ₹358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்

கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில், குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் வகையில் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் ஊரகப்பகுதியில் கட்டப்படும். 2030க்குள் குடிசையில்லாத் தமிழ்நாடு, கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் 

வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கீடு, இதன்மூலம் புதிய குடியிருப்புகள், திறன்மிகு மையங்கள், தொழிற்பயிற்சி கூடங்கள், நவீன மருத்துவமனைகள் உள்பட பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் 

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும், புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்

 சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ₹2 கோடி ஒதுக்கீடு அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ₹3050 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹600 கோடி ஒதுக்கீடு