சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025 பட்ஜெட்டில், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் ,  கோவையில் கலைஞர் நூலகம், ஏழை மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம், ₹300 கோடியில் 15000 ஸ்மாட் வகுப்பறைகள்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம், ஏழை மக்களுக்காக தாயுமானவன் திட்டம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக பதவியேற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.  தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முதல்முறையாக இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையில், “இந்தியாவில் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது

. 100 ஆண்டுக்கு முன்பு 1924-ல் நீதிக்கட்சி ஆட்சியில் காவிரியில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை உயர்த்தியதுடன்,  நாட்டிலேயே 2வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என பெருமிதத்துடன் கூறினார்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு ரூ.500கோடி ஒதுக்கீடு.

தமிழ் இணைய மின் கல்வி நிலையங்களுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

2000 கி.மீ அளவில் புதிதாக சாலை அமைப்பதற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.

மாநகர பகுதிகளில் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராமப் பகுதிகளில் சாலை திட்டப்பணிகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

5 லட்சம் ஏழை எளிய மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்க முதலமைச்சரின் தாயுமானவன் திட்டம் ஏற்படுத்தப்பட்டு ரூ.25,972 கோடி ஒதுக்கீடு.

2,000 புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்க ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் 

பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ₹300 கோடியில் உருவாக்கப்படும்

இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ₹100 கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ₹1000 கோடி ஒதுக்கீடு

புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவிகள் பயன் பெறும் வகையில் ரூ. 370 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கோவையில் பிரமாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ₹13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்