சென்னை: தமிழக விவசாயிகள் சிலர் சத்திஸ்கர் முதலமச்சர் பூபேஸ் பாகலை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்கு பண்ருட்டி பலாப்பழத்தை வழங்கியதுடன், அவர் விவசாயத்துக்கும், விவசாயகிளுக்கும் வழங்கியுள்ள சலுகைகளை வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

சத்திஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல்  தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் 5 நாட்கள் வேலை திட்டத்தையும் கொண்டு வந்துள்ளார்.  விவசாயத்துக்காக பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ள முதல்வர் பூபேஷ் பாகல்  இந்தியாவில் வேறு எந்த ஒரு முதலமைச்சரும் செய்யாததை செய்து சாதித்து வருகிறார்.  சத்திஸ்கர் மாநில விவசாயிகளுக்கு இடுபொருள் உதவித் தொகையாக, ராஜீவ் காந்தி விவசாயிகள் நியாய நிதித் திட்டம் என்ற பெயரில் ஏக்கருக்கு 10,000 ரூபாய்  விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார். இதற்கு உச்ச வரம்பு கிடையாது என்பது ஆச்சர்யம். ஒரு விவசாயியிடம் 10 ஏக்கர் நிலம் இருந்தால், பத்து ஏக்கருக்கும் உதவித் தொகை பெற முடியும். அதுபோல கரும்பு டன் ஒன்றுக்கு 3550 ரூபாய் வழங்கப்படுகிறது. நெல் குவிண்டாலுக்கு 2540 வழங்கப்படுகிறது. இதுபோன்ற சலுகை  வேற எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் கிடையாது.

இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த காவிரி பாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்த  விவசாயிகள், சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு பண்ருட்டி பலாப்பழத்தை பரிசாக வழங்கினார். முதல்வரின் வழங்கும் விவசாயிகளுக்கான சலுகை உள்பட அவரது பல்வேறு மக்கள் நலப்பணிகளை பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து கூறிய காவிரி விவசாய பாதுகாப்பு  சங்கத்தின் செயலாளரும், சத்தீஸ்கர் பயண நிகழ்வின் ஒருங்கிணைப் பாளருமான சுவாமிமலை சுந்தர விமல்நாதன், விவசாயிகளுக்கு யார் நல்லது செய்தாலும், அவர்களை நேரில் சந்தித்து நன்றியும் பாராட்டும் தெரிவிப்பது, எங்களுடைய தலையாய கடமை. இந்த அடிப்படையில் சத்தீஸ்லர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகலை நேரில் சந்தித்து எங்களுடைய நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அறந்தாங்கி காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழக விவசாயிகள் சத்திஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகலை தங்களது கனவு நாயகனாகவே நேசிக்கிறார்கள். அவரை நேரில் சந்தித்து பாராட்ட தமிழக காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல மாவட்ட விவசாயிகள் சத்திஸ்கர் சென்ற, முதல்வர் பூபேஸ் பாகலை சந்தித்தனர். அப்போது அவருக்கு அன்பு பரிசாக பண்ருட்டி பலாப்பழம், அரியலூர் அச்சு வெல்லம், பெரம்பலூர் முந்திரி, கடலூர் கருப்பு போன்றவற்றை வழங்கினர். பூபேஸ் பாகல் தமிழக விவசாயிகளின் தோழன் என்று குறிப்பிட்டுள்ளார்.