சென்னை:
மிழகத்தில் இன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இன்று வறண்ட வானிலை நிலவும் என்றும், டெல்ட்டா மாவட்டங்களில், நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.