பிரதமர் மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்!

Must read

டெல்லி: டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்தார். அப்போது, தமிழ்நாட்டின் பாரம்பரிய தானிய வகைகளை நினைவு பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார். தொடர்ந்து, தமிர்நாட்டுக்கு நீட் தேர்வு விலக்கு, கல்வி கொள்கை தொர்பாக விவாதித்து, விலக்கு அளிக்க வலியுறுத்தினார்.

இரண்டுநாள் பயணமாக நேற்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்  இன்று காலை அவர் குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் கூறினார்.

இதையடுத்து, இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பூங்கொத்த கொடுத்ததுடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய தானிய வகைகளை நினைவு பரிசாக பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி  நன்றி தெரிவித்த்ர். தொடர்ந்து,  நீட் விலக்கு, காவிரி, புதிய கல்வி கொள்கை, மேகதாது விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.

தமிழக சட்டமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள  நிலையில், அந்த  மசோதாவுக்கு  ஒப்புதல் வழங்க வலியுறுத்தியதுடன்,  மேலும், கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்பது, தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுத்தல், நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்தை கைவிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு மாநில அரசின் எதிர்ப்பு போன்றவற்றை பற்றியும் பேசியுள்ளார். அத்துடடன்  பல்வேறு  கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வழங்கினார்.

More articles

Latest article