சென்னை:

மிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து, நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்  நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போதுதான் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான மாநிலங்கள் மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுதொடர்பாக மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த நிலையில், நாளை தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. மாலை 5-00மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள கூட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்தும் முன் எச்சரிக்கை குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

பிரதமர் மோடி ஊரடங்கு குறித்து தெரிவிக்கும் தகவல்களை தொடர்பாகவும்,  ஊரடங்கு குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக இன்று   கொரோனாவை கட்டுப்படுத்துவதை குறித்தும், தற்போதைய நிலையை குறித்தும் முதல்வர் பழனிசாமி மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.