சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவையில் ஐடி பார்க், பல மாவட்டங்களில் நியோ டைடர் பார்க், குலசேகரன்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா, சேலத்தில் ஜவுளி பூங்கா உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, குலசேகரன்பட்டினத்தில் விண்வெளித் தொழில் பூங்கா அமைகிறது, ரூ.2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித்தொழில் மற்றும் உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்காஉக டிட்கோ மூலம் அமைக்கப்படும்

கோவையில் ரூ.1100 கோடி செலவில் ஐடி பூங்கா அமைக்கப்படும். இந்த பூங்கா சுமார் 20லட்சம் சதுர அடியில் கட்டப்படும்.

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் அமைகிறது நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன்முலம் 13ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ரூ.1,100 கோடி மதிப்பில் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா மைக்கப்டும்.

தஞ்சாவூரில் சிப்காட், சேலத்தில் ஜவுளி பூங்கா, பால் உற்பத்திக்கு நவீன பூங்கா

சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும். ராமநாதபுரத்தில் தமிழ்நாடு நீர் விளையாட்டு ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும்.

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் ரூ.120 கோடி மதிப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

மதுரையில் தொழில் புத்தாக்க மையம் ரூ.24 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். மதுரையில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.118 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆவின் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு ரூ. 60 கோடியில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மற்றும் சேலத்தில் ரூ. 2,483 கோடியில் புதிய ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் . கரூர், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ரூ.20 கோடி செலவில் 10 சிறிய ஜவுளி பூங்காக்கள் நிறுவப்படும்;

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். அரசுசார் இணைய வழி சேவைகளை மேலும் துரிதமாகக் கொண்டு செல்ல, எல்காட் ரூ.200 கோடி மதிப்பீட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும்

500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவழங்கும் நிறுவனத்திற்கு ஊதிய மானியம். ரூ. 25 கோடி செலவில் தொழில்நுட்ப சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.

ரூ. 111 கோடியில் 10 புதிய அரசு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.