சென்னை: தமிழக சட்டமன்றத்தில்,   2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

2025 டிசம்பரில் சென்னை பூவிருந்தவல்லி – கோடம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்  என அறிவிப்பு.

சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ₹12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.  ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்

சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்

இந்த நிதியாண்டில் 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் மினி பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு 9,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு