7வயது சிறுவனின் தாடையில் இருந்த கட்டியில் 526 பற்கள்! அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்

Must read

சென்னை:

சென்னையைச் சேர்ந்த 7 வயது சிறுவனின் கீழ் தாடையில் பல் முளைக்காத நிலையில், தாடையில் உருவாகியிருந்த கட்டியினுள் 526 பற்கள் இருந்தது அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த  பிரபுதாஸ் என்பவரின் மகன் ரவீந்திரன்.  ரவீந்திரனுக்கு சிறு வயதில் இருந்தே சரியான முறையில் பல் முளைக்காமல் இருந்து வந்தது. கீழ்த்தாடைப் பகுதியில் அரவே பல் மூளைக்காத நிலையில், தாடையின் கீழ்ப்பகுதியில் சிறிய கட்டி உருவாகி வந்தது. இதன் காரணமாக அவ்வப்போது வலியால் துடிந்து வந்த சிறுவனுக்கு தற்காலிக மருத்துவ உதவிகள் வழங்கி வலி போக்கப்பட்டு வந்தது.

தற்போது 7 வயதாகும் ரவீந்திரனுக்கு  கீழ் தாடையில் ஏற்பட்ட வீக்கம் அதிக வலியை கொடுத்த நிலையில், சிகிச்சைக்காக சென்னை அருகே உள்ள  சவீதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அங்கு எடுக்கப்பட்ட சோதனையில், ரவீந்திரனின்  வாயில் சிறுதும் பெரிதுமாக வளர்ச்சி யடையாத பற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கீழ்த்தாடைப் பகுதியில் உள்ள கட்டியும் அகற்றப்பட்டது.

பின்னர் அந்தக் கட்டியை அறுத்து பார்த்தபோது, அதனுள் சிறுசிறு பற்களாக மொத்தம் 526 பற்கள் இருந்துள்ளது. இதன் மொத்த எடை 200 கிராம் என்று கூறப்படுகிறது.  தற்போது அந்த சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த  2014ம் ஆண்டு மும்பையில் 17 வயதான இளைஞருக்கு, இதுபோல அறுவை சிகிச்சையின் போது 232 பற்கள் நீக்கப்பட்டது. தற்போது 526 பற்கள் நீக்கப்பட்டு உள்ளது, உலகில் முதல்முறை என்று கூறப்படுகிறது.

More articles

Latest article