ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை!

Must read

சென்னை,

திமுக இரு அணிகளும் இணைவது குறித்து இன்று பிற்பகல் பேச்சு வார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. அதன் காரணமாக கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

இரட்டை இலையை மீண்டும் பெற வேண்டுமானால், இரு அணிகளும் இணையவேண்டியது கட்டாயமாகிறது. அதைத்தொடர்ந்து இரு அணிகளும் இணையும் விதமாக குழுக்கள் அமைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று பிற்பகல் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது..

அதற்கு ஏதுவாக ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கையை ஏற்று,  தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா, தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

முன்னதாக இரு அணிகளிடையே நேற்று இரவு ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. எடப்பாடி அணியை சேர்ந்த செங்கோட்டையன், வைத்தியலிங்கம்  ஆகியோர் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் இடையே தனியார் ஓட்டல் ஒன்றில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றத்தை தொடர்ந்தே இன்று தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More articles

Latest article