தினகரன் கைது; தமிழகத்துக்கு அவமானம்! தமிழிசை வேதனை

Must read

சென்னை,

ரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து டிடிவி தினகரனை டில்லி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

இதன் சம்பவம் காரணமாக டிடிவி தினகரன்  தமிழகத்துக்கு அவமானம் தேடித்தந்து விட்டார் என்று தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை வேதனை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மக்களிடம் பணத்தைகொடுத்து வாக்குகளை பெற்று விடலாம் என்ற மாண்பை உருவாக்கிய தினகரன், தேர்தல் ஆணையத்திற்கு ஊழல் பணத்தை சன்மானமாக கொடுத்து தன்மானத்தை விற்றுள்ளார்.  இதன் காரணமாக  தமிழகத்திற்கே மிகப்பெரிய அவமானத்தை  தினகரன் தேடித்தந்துள்ளார்.

தினகரன்மீது நடவடிக்கை எடுத்ததை பாஜகவின் பின்னணி என்று கூறுவது ஏற்க முடியாதது என்றும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார். தே

தேர்தல் ஆணையத்தின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டதாலேயே தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தினகரனை மனித புனிதரைப் போல அமைச்சர்கள்  பாவிப்பது நகைப்புக்குரியது, யார் குற்றம் செய்தாலும் தண்டனை கிடைத்தே தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழிசை கூறினார்.

இரட்டை இலை பெற டிடிவி தினகரனும், சுகேஷும் மாறி மாறி தங்களுக்கு ஒருவரையொருவர் தெரியாது என்று கூறினாலும்,  இருவருக்கும் இடையே நடைபெற்ற  தொலைபேசி உரையாடல்,  , பணப்பரிமாற்றம் நடைபெற்றதற்கான ஆதாரங்கள்,  சிசிடிவி காட்சி பதிவுகள்  என ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில்தான் டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் இறுதி கட்டமாகவே தினகரன் கைது நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article