காபூல்

ப்கான் தலைநகர் காபூல் விமான நிலைய சோதனைச் சாவடிகளைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து அங்கிருந்து பல நாட்டு மக்களுடன் ஆப்கான் மக்களும் வெளியேறி வருகின்றனர்.   அமெரிக்கப்படைகள் ஆப்கானில் இருந்து முழுமையாக விலக வரும் 31 ஆம் தேதி இறுதி நாள் என்பதால் தாலிபான்கள் காபூல் விமான நிலையத்தை முழுமையாக கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே பிரிட்டன் படைகள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன.  அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள காபூல் விமான நிலையத்தின் சோதனைச் சாவடிகள் மற்றும் நுழைவாயில்கள் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளன.   அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதும் காபூல்விம்கான நிலையம் தாலிபான்கள் வசம் வரும் எனக் கூறப்படுகிறது.

குறிப்பாகச் சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு அங்குள்ள அனைத்து சோதனைச் சாவடிகள் மற்றும் நுழைவாயில்களைத் தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனால் நாட்டை விட்டுத் தப்பி ஓட நினைக்கும் ஆப்கான் மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.