புதுடெல்லி:

தாஜ்மகாலை முஸ்லிம்கள் கட்டவில்லை, அது சிவன் கோயில் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி அடிக்கடி விமர்சனத்துக்குள்ளாபவர் மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே.

இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,”தாஜ்மகாலை முஸ்லிம்கள் கட்டவில்லை. இது குறித்து தனது சுயசரிதையில் ஷாஜகான் கூறும்போது, இந்த அரண்மனை மன்னர் ஜெயசிம்மாவிடமிருந்த வாங்கியது என்று தெரிவித்துள்ளார்.
மன்னர் பரமதீர்த்தா கட்டிய சிவன் கோயில்தான் இந்த தேஜோ மஹால்ய. இதுதான் காலப் போக்கில் தாஜ் மகால் என்று மாறியது.
எதிர்காலத்தில் நாம் இப்படி உறங்கிக் கொண்டிருந்தால், நம் வீடுகள் எல்லாம் மசூதிகளாகிவிடும். ராமரை ஜஹாப்னா என்றும் சீதையை பீபி என்று அழைப்பார்கள்”
என்றார்.

தாஜ்மகால் குறித்து ஆனந்த ஹெக்டே மீண்டும் மீண்டும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இத்தகைய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.