இடைக்கால பட்ஜெட்: அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

Must read

டில்லி:

மோடி அரசின் கடைசி  இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி  தாக்கல் செய்யப்பட  உள்ள நிலை யில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்து உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு உள்பட சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்ப ட்டது. இன்னும் ஓரிரு மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான ஐந்தாண்டு கால ஆட்சியின் இறுதி நிதிநிலை அறிக்கை பாராளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் ஜனவரி 30-ம் தேதி அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்துக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல், மாநிலங்களவை சபாநாயகரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்யா நாயுடு வரும் 31-ம் தேதி அனைத்துக்கட்சிகளையும் சேர்ந்த அவைத்தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

More articles

Latest article