இந்திய அணி அபார வெற்றி 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது

அடிலெய்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் துவக்கம் முதலே அதிரடி காட்டியது.

7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதை அடுத்து ஓவர்கள் குறைக்கப்பட்டது.

16 ஓவரில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் மீண்டும் ஆட்டம் துவங்கியது.

இறுதியில் 16 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது.