மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்திருக்கிறது.
நகரின் முக்கிய சாலைகள் நீரில் மூழ்கி உள்ளதுடன் பேருந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்பதேவி மற்றும் சியோன் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இந்த நிலையில், மும்பையின் தாதர் பகுதியில் குதிரை மீது சவாரி செய்து ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவு டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
இதனை தனது மொபைல் போனில் படம்பிடித்த ஒருவர் இணையதளத்தில் வெளியிட்டதால் இது வைரலானது.
Yeh @Swiggy walo ne go green bohot seriously le liya. pic.twitter.com/YYQtvmfcj7
— Vinay (@IndianKopite) July 3, 2022
மழை வெள்ளத்திலும் குதிரையில் ஏறிச்சென்று உணவு டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியரை பலர் பாராட்டி வந்தாலும், மழைக்கு இதமாக அதில் என்ன உணவு இருக்கிறது என்பதை பலரும் பலவிதமாக பகிர்ந்து வருகின்றனர்.