சுஷாந்த் தற்கொலை வழக்கில் கங்கணாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்….!

Must read


பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு இடையே கருத்து மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகை கங்கணா, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்‌ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உள்ளிட்டோருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி செய்துள்ளார்.

More articles

Latest article