சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடது கையில் காயம் ஏற்பட்டதாகவும் ,
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக காயத்தில் இருந்து குணமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் சூர்யா விரைவில் குணமாக வேண்டும் என பிரார்த்தனை செய்து வருவதாக தெரிவித்து வருகின்றனர்.