டெல்லி: உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா விசாரிக்கும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இன்று இலவசங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்படுவதாக அறிவித்தார்.

இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக, தலைமைநீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெறும் நாளான இன்று, அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரடி ஒளிரபப்பு செய்யப்பட்டு வருகிறது.  www.webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இன்று காலை 10.30 மணி முதல் விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது.

தலைமை நீதிபதி என்வி.ரமணா தலைமையிலான அமர்வு  இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை நடத்தியது. இன்று, தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ள  நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ஹிமா கோலி ஆகியோருடன் தலைமை நீதிபதி ரமணா பெஞ்ச் உடன் பகிர்ந்து கொண்டார்.  தொடர்ந்து, இந்த வழக்கில்  விரிவான விசாரணை நடைபெற்றது.

விசாரணையைத் தொடர்ந்து, அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் இலவச திட்ட அறிவிப்புகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய தலைமை நீதிபதி, இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால்,   இலவச திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த கோரிய பொதுநல மனுக்கள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்ததுடன்,  வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தது உத்தரவிட்டுள்ளார்.  மேலும்,  தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்சனையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை நேரடியாக இன்று ஒளிபரப்பப்பட்டதுசாதனையாக கருதப்படுகிறது. இது நீதித்துறையின் வளர்ச்சியை காட்டுவதாக வழக்கறிஞர்கள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கடந்த  2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளை கொள்கையளவில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி வழங்கிய பின்னர் உச்ச நீதிமன்றத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் நடப்பது இதுவே முதல் முறை.

இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய கடைசி வேலை நாளில் அவரது சம்பிரதாய பெஞ்ச் முன் நடக்கும் நடவடிக்கைகள் இந்த இணைப்பில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.