உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை விசாரணைகளை நேற்று முதல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது.

ஒவ்வொரு நாள் விசாரணையையும் https://webcast.gov.in/scindia/ என்ற இணையதளத்தில் காலை 10:30 மணி முதல் நேரடியாக பார்க்க உச்சநீதிமன்றம் வழிசெய்துள்ளது.

2018 ம் ஆண்டு செப். 27 ம் தேதி நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்த அனுமதியை அடுத்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று செப். 27 முதல் முக்கிய வழக்குகளின் விசாரணை ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் சிவசேனா கட்சி தொடர்பான வழக்கு ஆகியவை நேற்று விசாரிக்கப்பட்டது.

நேற்றைய இந்த நடவடிக்கைகளை நாடு முழுவதும் இருந்து 8 லட்சம் பேர் பார்வையிட்டதாக அறிக்கை வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம்.

இது வரலாற்றில் முக்கியமான தருணம் என்றும் தெரிவித்துள்ளது.