பெங்களூரு: கர்நாடக மாநில பாஜக மாநில அரசின் காண்டிராக்ட் ஊழலை பிரதிபலிக்கும் வகையில் ‘பேசிஎம்’  என அச்சிடப்பட்ட போஸ்டர் மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது,  ‘பே-எம்எல்ஏ’ போஸ்டர் பெங்களூரு மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இது கர்நாடக மாநிலத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹாசன் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ புகைப்படத்துடன் வெளியான பே எம்.எல்.ஏ போஸ்டரால் நகரம் முழுவதும் காணப்படுகிறது. இதை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜனதா அரசின் 40 சதவீத காண்டிராக்ட் கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்து  பே-சி.எம். என்ற போஸ்டiர ஓட்டி காங்கிரசார் பரபரப்பை ஏற்படுத்தி வந்தனர்.  இந்த நிலையில்  தற்போது,  பா.ஜனதா எம்.எல்.ஏ.வான பிரீத்தம் கவுடா மீது கமிஷன் குற்றச்சாட்டி கியூ-ஆர் கோடுடன் அவரது புகைப்படம் அச்சடித்து பே-எம்.எல்.ஏ. என்ற போஸ்டர்  ஒட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் 50 சதவீதம் கமிஷன் வாங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இதை பார்த்த பா.ஜனதா பிரமுகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பா.ஜனதா தரப்பில் ஹாசன் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு உதய் பாஸ்கரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.