பிளஸ்2 மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; ஆந்திர அரசுக்கு கண்டனம்! உச்சநீதி மன்றம்…

Must read

டெல்லி:  அனைத்து மாநிலங்களும் பிளஸ்2 மதிப்பெண்ளை  ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பிளஸ்2 தேர்வு நடத்துவதாக அறிவித்துள்ள  ஆந்திர மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஒராண்டுக்கும் மேலாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் 1முதல் 12ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  தொற்று பரவல் நீடிப்பதால், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில்  சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது. ஆனால், ஆந்திரா மாநிலம்  12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்தது.

இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் விசாரரைணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது, 12-ம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலங்கள் இன்று முதல் 10 நாட்களுக்குள் மதிப்பீட்டிற்கான திட்டத்தை அறிவிக்கவும், சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இக்கு குறிப்பிடப்பட்ட காலக்கெடுவைப் போல ஜூலை 31 க்குள் உள் மதிப்பீட்டு முடிவுகளை அறிவிக்கவும் அனைத்து மாநில வாரியங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்துகிறது.

மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ள ஆந்திர அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மாணவர்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்றும் எச்சரித்துடன்,  பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

 

More articles

Latest article