சென்னை: மேற்குவங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 2வது கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 18.39% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 23-ந்தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 91.78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இன்று மீதமுள் . 142 தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 29) இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இன்றைய வாக்குப்பதிவில், 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடைமையை நிறைவேற்ற உள்ளனர். இதன் காரணமாக காலை முதலே வாக்குச்சாவடிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி 18.39 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
[youtube-feed feed=1]