மலையாள திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் கே.பி.ஏ.சி. லலிதா.

550 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் காதலுக்கு மரியாதை, பரமசிவன், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

74 வயதாகும் இவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை எடுத்துவந்த இவர் நேற்றிரவு மரணமடைந்தார்.

1947 ம் ஆண்டு மார்ச் 10 ம் தேதி பிறந்த இவர் கேரளாவில் புகழ்பெற்ற கே.பி.ஏ.சி. நாடகக்குழுவில் இணைந்தார், அதுவே பின்னர் லலிதாவின் அடையாளமாக மாறியது.

1969 ம் ஆண்டு திரையுலகில் நுழைந்த இவர் 1978 ம் ஆண்டு இயக்குனர் பரதனை திருமணம் செய்துகொண்ட அவர் அவரது அனைத்து திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு கேரக்டரில் நடித்து வந்தார். 1998 ம் ஆண்டு பரதன் மறைவுக்குப் பின் திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருந்தார் லலிதா.

பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கிய இவர், 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சாந்தம்’ மற்றும் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அமரம்’ படத்திற்காக இதுவரை இரண்டு முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார்.

கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராக இருந்த லலிதாவின் மகன் சித்தார்த் பரதன் மலையாள படங்களில் நடிகராகவும் இயக்குனராகவும் உள்ளார்.