கொச்சி

லையாளம் மற்றும் தமிழ் திரையுலக நடிகை KPAC லலிதா உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

மலையாளத் திரை உலகின் மூத்த நடிகையான KPAC லலிதா தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் தமிழ் என 550க்கும் அதிகமான படங்களில் நடித்துப் பல ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார்.

இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவம், கிரீடம், அலைபாயுதே, மாமனிதன், காற்று வெளியிடை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.  இவருக்கு தற்போது 73 வயதாகிறது.

வயது மூப்பு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டு நடிகை லலிதா கொச்சியில் மரணம் அடைந்தார்.   லலிதாவின் மரணத்துக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் நடிகை லலிதாவின் மரணம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.