டெல்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கில் இருந்து சசிதரூரை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டு உள்ளது.

சசி தரூர் மீது அவரது மனைவி சுனந்தா புஷ்கரின் மரணத்தில் ஒரு பெண்ணை கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்து. தற்போது அதில் இருந்து சசிதரூர் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

முன்னாள் மத்தியஅமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான  சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி டில்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும், அ  அவர் விஷமருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சுனந்தா புஷ்கரின் கணவரான சசிதரூர் மீது தற்கொலைக்கு தூண்டியதாகவும், ண்ணை கொடுமைப்படுத்துதல் உள்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து டெல்லி காவல்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில், காவல்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களையும் பதிவு செய்தது.

கடந்த 2017ஆம் வருடம் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி, இந்த வழக்கில்,  யாருக்கும் எதிராக எதுவும் கண்டுபிடிக்கவில்லை என கூறியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 2019 ஆகஸ்ட் 31, அன்று, தரூரை புஷ்கரின் மரணம் தொடர்பாக தற்கொலைக்கு தூண்டியதாக அல்லது அவருக்கு எதிராக  கொலை வழக்குகளை தொடருமாறு டெல்லி காவல்துறை டெல்லி நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

அப்போது நடைபெற்ற வாதத்தின்போது, சுனந்தா புஷ்கரின்  மரணத்திற்கு விஷம் காரணம் என்று பிரேத பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளதாகவும், ​​12 மணிநேரம் முதல் நான்கு நாட்கள் வரையிலான 15 காயங்கள் அவரது உடலில் இருந்தன என்று கூறினார்.

ஆனால், அதை மறுத்த  தரூரின் வழக்கறிஞர்  விகாஸ் பஹ்வா, புஷ்கரின் சாவுக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று வாதிட்டார்.  “இது கொலை அல்லது தற்கொலை அல்ல என்று அறிக்கைகள் உள்ளன. ஒரு உளவியல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்டவரின் மன நிலையை அறிய விரும்பினர். ஆனால் இன்றுவரை அவர்கள் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலையா என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக   எஸ்ஐடி எஃப்.பி.ஐ -யை அணுக வேண்டியிருந்தது, ஏனெனில் முந்தைய அரசாங்கத்தின் காரணமாக, அவரது மரணம் குறித்த சிஎஃப்எஸ்எல் அறிக்கை சரியல்ல என்று குறிப்பிட்டார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தரூர் வழக்கறிஞர், சிஎஃப்எஸ்எல் அறிக்கை சரியில்லை என்று கூறி ஒரு பொறுப்பற்ற அறிக்கையை அரசுத் தரப்பு கூறுவதாக குறிப்பிட்டவர், இந்த வழக்கில்,  “ஆல்ப்ராக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தியாவில் உள்ள ஆய்வகங்கள் எதுவும் கூறவில்லை என்று மறுத்தார்.

தொடர்ந்து பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் இருந்து, அவரது கணவர் சசிதரூரை விடுவித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.