டெல்லி
தொடர்ந்து இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி சரிந்து வருகிறது.
சர்க்கரை என்பது தற்போது மிகவும் அத்தியாவசிய தேவையாக உள்ளது. பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப்பொருள் என்றாலே அது இனிப்பு வகையான பண்டங்கள்தான்.
ஆனால் இந்தியாவின் முன்னணி சர்க்கரை உற்பத்தி மாநிலங்களான உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவிலும் சர்க்கரை உற்பத்தி குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
சர்ர்க்கரையின் உற்பத்தி தற்போது குறைந்து வருவதால் சர்க்கரை பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது. இதன் உற்பத்தி அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 130.55 லட்சம் டன்னாக உள்ளது.
அதாவது நடப்பு 2024-25 ஆண்டில் இந்திய சர்க்கரை உற்பத்தி தொடர்ந்து சரிவை சந்தித்து தற்போது 13.63 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது.