ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

உணவு குடிநீர் ஏதும் இன்று பலநாட்களாக பட்டினியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான அவசரகால நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்க வலியுறுத்தியுள்ள பிரதமர் அவசர கால திட்டத்தை தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்த், உகாண்டா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றவும் கப்பல்கள் மூலம் மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூடானில் இருபிரிவுகளாக பிரிந்து போராடிவரும் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினரை வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு பிரிவினரை வேறு வேறு நாடுகள் ஆதரித்து வருவதை அடுத்து வெளிநாடுகளின் ராணுவ நடவடிக்கை பெரும் விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சப்படுகிறது இதனால் இந்தியா தனது சொந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சூடானில் சிக்கியுள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்கவேண்டியது நம் கடமை : அமைச்சர் செஞ்சி மஸ்தான்