சிங்கப்பூர்:  ஆர்.ஜே.டி. கட்சி தலைவர் லாலு பிரசாத்துக்கு சிங்கப்பூரில் நடைபெற்ற  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவுபெற்றது என அவரது மகனும், பீகார் மாநில துணைமுதல்வருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்து உள்ளார்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லாலுபிரசாத் யாதவ்வுக்கு, அவரது மகள் சிறுநீரகம் தானம் தர முன்வந்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூரில், அவருக்கு இன்று சிறுநீரக மாற்று அறுவை சி

மாட்டுத்தீவனம் உள்பட பல்வேறு ஊழல் வழக்கில் சிக்கி பல ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள லாலுபிரசாத் யாதவ், உடல்நலம் பாதிபு காரணமாக ஜாமினில் வந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்பட பல்வேறு உடல்நலப் பாதிப்பு உள்ளது. இதற்காக டெல்லி உள்பட பல இடங்களில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, சிங்கப்பூரில் வசித்து வரும்,  அவரது மகள் ரோஷ்னி ஆச்சார்யா தனது சிறுநீரகத்தை தந்தைக்கு தானம் கொடுக்க முன்வந்த நிலையில், அவருக்கு இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள தேஜஸ்வி யாதவ்,  தனது தந்தையும், மூத்த சகோதரியும் தற்போது நலமாக இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு லாலு ஐசியுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனது தந்தைக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி மற்றும் நல்வாழ்த்துகள். மருத்துவமனையில் தனது தந்தையை அழைத்துவரும் விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.