சென்னை: ’அதிமுக என்பது கட்சியே கிடையாது’ என  முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்து பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி, பின்னர் திமுகவில் இணந்துரு, தற்போதுரு அமைச்சராக உள்ள   ராஜகண்ணப்பன் கூறினார்.

சிவகங்கை அடுத்துள்ள கண்டாங்கிபட்டியில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, மற்றும் அந்தமான் நிக்கோபார் உள்ளிட்ட மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைத்ததுடன், சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்க்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “8 கோடி பேர் வசிக்கக் கூடிய தமிழ்நாட்டில் குறை இல்லாமல் ஆட்சி என்பது நடத்தமுடியாது. இருந்த போதிலும் அதனையும் மீறி சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வருகிறார். திராவிட மாடல் ஆட்சியை குறை சொல்பவர்களைப் பற்றி கவலை இல்லை. எங்களுக்கு மக்களின் நலனே முக்கியம். முதலமைச்சர் ஸ்டாலின் பின்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்றார்.

அதிமுகவின் தற்போதைய நிகழ்வுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  அதிமுக என்பது கட்சியே கிடையாது. திராவிட தலைவர்கள் இறந்த பின்னர், திராவிட இயக்கங்கள் ஒன்றாகிவிட்டது. தற்போது ஒரே திராவிட இயக்க தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். அவர் பின்னால் செல்வதே திராவிட தொண்டர்களின் கடமை” என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனின் பேச்சு, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் இருந்து ஜெயலலிதா காலில் விழுந்து பதவியை பெற்றவர் ராஜகண்ணப்பன். அவர்மீது ஊழல் உள்பட பல்வேறு வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. இவர்மீதான அதிருப்தி காரணமாகவே மறைந்த ஜெயலலிதா அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதனால், திமுகவில் இணைந்து அரசியல் ஆதாயம் அடைந்தவர், தற்போது பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ளார். அதிமுகவால் அரசியலில் அடையாளம் காணப்பட்ட இவ, தற்போது  அதிமுகவை வசை பாடியிருப்பது நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இவர் கடந்த சில மாதங்களுக்கு, ‘அரசு அதிகாரியை ஜாதி பெயரைச் சொல்லி திட்டி, மன உளைச்சலை ஏற்படுத்தி சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.