சுஷாந்த் சிங் மரணம்.,கொலையாக இருக்கலாம் : சுப்பிரமணியன் சுவாமி

Must read


சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வாரிசு நடிகர்கள் தங்கள் கணக்கை டீஆக்டிவேட் செய்யும் அளவுக்கு நெட்டிசன்கள் விரட்டி அடித்தனர் .
சுஷாந்த் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார்.


இந்நிலையில் பா.ஜ.க எம்.பி சுப்பிரமணியன் சுவாமி சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சுஷாந்த் சிங்கின் மரணம் கொலையாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு அடுக்கடுக்கான காரணங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில் அவரது காதலியான ரியாவுக்கு சம்பந்தம் இருப்பதாக கூறப்பட்டு வரும் நேரத்தில், சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள பதிவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More articles

Latest article