கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை முறை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கைகள் குறித்து சூர்யா 10 கேள்விகளை முன்வைத்தார்.
இந்நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் அதை இணையதளத்தில் பகிர்ந்து வைரல் செய்து வருகின்றனர்.
1. முப்பது கோடி மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்விக் கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?
2. மூன்று வயது குழந்தையால் மூன்று மொழி படிக்க முடியுமா?
3. நாட்டில் 1848 பள்ளிகள் மூடப்படப் போகிறதே இதற்கு பதில் என்ன?
4. கல்வியில் சிறந்த நாடுகளில் 8-ம் வகுப்புவரை எந்த தேர்வும் இல்லை என்கிற நிலையில் 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு என்பது எப்படி சிறந்த கல்வியாகும்?
5. நுழைவு தேர்வு, பொதுத் தேர்வு, தகுதி தேர்வு, நீட் தேர்வு என்று மாணவர்கள் தொடர்ந்து தேர்வை எழுதிக் கொண்டிருந்தால் அவர்கள் வாழ்க்கையை படிப்பது எப்போது?
6. ஒரு லட்சத்து 80 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் ஒருவர் மட்டுமே பாஸ் என்றால் இதை எப்படி பார்ப்பது?
7. 50 ஆயிரம் கல்லூரிகள் 12 ஆயிரமாக குறைக்கப்படுவதும் கோச்சிங் சென்டர்கள் அதிகரிப்பதும்தான் புதிய கல்வி கொள்கையா?
8. சுமார் 80 லட்சம் ஆசிரியர்களை கொண்ட இந்தியாவில் புதிய கல்வி கொள்கையை ஓரேயொரு ஆசிரியர் அமைப்பு, ஒரேயொரு மாணவர் அமைப்பும் சேர்ந்து தீர்மானிப்பது எந்த விதத்தில் நியாயம்?
9. விதவிதமான கல்வி முறைகளை வைத்துக் கொண்டு தேர்வு மட்டும் பொதுவானது என்பது எப்படி சரியாகும்?
10. எதிர்கால தலைமுறையின் தலையெழுத்து எழுதப்படும் நேரத்தில் நாம் ஏன் இன்னும் விழிப்படையாமல் இருக்கிறோமே ஏன்?
என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார் சூர்யா.