சென்னை

க்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் புதிய கல்விக் கொள்கை குறித்து டிவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த கொள்கை குறித்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்ப்படுத்த வேண்டும்.

மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.”

எனப் பதிந்துள்ளார்.