பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்…..!

Must read


ஜூலை 28-ம் தேதி நடிகர் தனுஷ் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.
#HappyBirthdayDhanush, #HBDDhanush ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கிய ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.
இந்நிலையில் வாழ்த்து தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.


“என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்கு முக்காடிப் போய்விட்டேன், அனைத்து காமன் டிபிக்கள், மேஷ் அப் வீடியோக்கள், மூன்று மாதங்களாக நீங்கள் செய்து வந்த கவுண்ட்டவுன் டிசைன்கள் அனைத்தையுமே என்னால் முடிந்தவரை பார்த்தேன். ரசித்தேன். மகிழ்ந்தேன்.மிக்க மிக்க நன்றி அதையும் தாண்டி நீங்கள் செய்த அத்தனை நற்பணிகளையும் கண்டு நெகிழ்ந்த நான், உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

More articles

Latest article