சென்னை

வரவர் பயின்ற பள்ளிகளிலேயே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையம்  மூலம் வேலை வாய்ப்புக்குப் பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் படித்து முடிந்தவுடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கமாகும்.  இதற்காகச் சான்றிதழ் கிடைத்த உடன் மாணவர்கள் அலுவலகம் சென்று பதிவு செய்து வந்தனர்.   இதன் மூலம் மேற்படிப்பு படித்த உடன் அதையும் இணைத்து மூப்பு வருடங்களை அதிகரிக்க முடியும் என்பதால் இந்த நடைமுறை கையாளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நாளை 2021 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்க உள்ளது.  இதையொட்டி இந்த மாதம் 17 முதல் அக்டோபர் 1 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதியுடன் அவரவர் பயின்ற பள்ளிகளிலே இணையம் மூலமாக வேலை வாய்ப்புக்காக பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி பள்ளிகளில் சான்றிதழ் கிடைத்த உடன் மாணவர்கள் இணையம் மூலம் https://tnvelaivaippu.gov.in என்னும் இணைய தளத்தில் பதிவு செய்யலாம் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கத் தமிழக அரசால் உரிய வழி வகைகள் செய்யப்பட்டுள்ளதாக  வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.