சென்னை

மிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான மானவர் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ள நிலையில் மருத்துவம் தாமதமாவதால் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் ஆகிய இரு படிப்புகளுக்கும் சேர்ந்து பல மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு இரு படிப்புகளுக்கும் விண்ணப்பிப்போர் மருத்துவ ப்டிப்புக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். மருத்துவக் கல்லூரிக்கான மாணவர் தர வரிசைப் பட்டியல் செவ்வாய் அன்று வெளி வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த பட்டியல் ஜுலை மாதம் 4 ஆம் தேதிக்கு மேல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் சுற்றில் இடம் பெற்றுள்ள 9872 பேருக்கான சேர்க்கை ஜூலை 10க்குள் முடிந்து விடும். அவர்களுக்கு 11 ஆம் தேதி அன்று கல்லூரி ஒதுக்கீடும் நடந்து முடிந்து விடும். மொத்தமுள்ள 1.5 லட்சம் இடங்களில் நல்ல கல்லூரியில் இடம் பெற இந்த நாட்களுக்குள் மட்டுமே மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

தற்போதைய நிலையில் நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ள மாணவர்கள் தங்களுக்கு மற்றொரு விருப்பமான பொறியியல் கல்லூரிகலில் நல்ல கல்லூரிகளை தேர்வு செய்து முடக்கி விட வாய்ப்பு உண்டு. இதனால் பொறியியல் மட்டுமே தேர்வு செய்ய நினைக்கும் மாணவர்களுக்கு அந்த இடம் தேர்வு செய்ய முடியாத நிலை உண்டாகும்.

அதே நேரத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்னும் நிலையில் உள்ள அறிவியல் மாணவர்களுக்கு மற்றொரு பிரச்சினை உள்ளது. பல மாநிலங்களில் ஏற்கனவே தரவரிசைப் பட்டியல் வெளியிடபட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு தாமதிக்கபடுவதால் மற்ற படிப்புக்களை தேர்ந்தெடுத்து சேர முடியாத நிலை ஏற்படலாம் என மாணவர்கள் கவலையுரன் தெரிவித்துணர்.