சென்னை

ந்த ஆண்டு தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது

முன்பு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்ப்பது என்பது ஒரு கேவலமாகப் பார்க்கப்பட்டது.   வசதி அற்றோர் மட்டுமே அரசுப் பள்ளிகலில் குழந்தைகளை சேர்ப்பார்கள் எனக் கருத்து உள்ளது.  தற்போது அது முற்றிலும் மாறி உள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.  அன்று முதல் இதுவரை முதல் வகுப்பில் 32 நாட்களில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் முதல் வகுப்பில் சுமார் 21 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  அடுத்ததாக கள்ள்க்குறிச்சி மாவட்டத்தில் 16750 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்,

அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  எனவே இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு அளித்து வரும் பல  நலத்திட்டங்களும் சலுகைகளுமே காரணம் என கூறப்படுகிறது.