இப்படியும் ஒரு தற்கொலையா? – நெஞ்சை பதற வைக்குது!

Must read

மும்பை, 

தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று விளக்கம் அளித்தபடியே தானும் உயிரை மாய்த்துக் கொள்ளும்  மாணவர் ஒருவரது  வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

மும்பை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பரத்வாஜ் என்ற 24 வயதான மாணவர் நேற்று அதிகாலை இந்தவேலையை செய்துள்ளார். அந்த ஹோட்டலின் கடைசி தளமான 19 ஆவது தளத்திலிருந்து குதித்து 11 ஆவது மாடியில் விழுந்து ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். கீழே குதிக்கும் முன் அவர் செய்த காரியம்தான் நம்மை மிரளவைக்கிறது.

தனது ஆண்ட்ராய்ட் போன்  மூலம் தனது முகநூலில் அதை நேரலையாக பதிவிட்டுள்ளார். “உங்களுக்கு இன்று உயரமான இடத்திலிருந்து குதித்து உயிரை விடுவது குறித்து சில குறிப்புகளை சொல்ல விரும்புகிறேன்” என கூறிவிட்டு ஒவ்வொரு ஸ்டெப்பாக சொல்லிக் கொண்டே 19 ஆவது மாடியிலிருந்து 11 ஆவது மாடியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இந்தக் காட்சி  பார்ப்பவர்களை பதற வைக்கிறது.  மரணத்தை ஒருவரால் இந்தளவு நேசிக்க முடியுமா என  அனைவரையும் அவர்  ஆச்சரியப்படுத்தியுள்ளார்.  11 ஆவது மாடியில் அலறல் சத்தம் கேட்டதும் ஹோட்டல் பணியாளர்கள் அவரது உடலை மீட்டு     மருத்துவமனைக்குச் சென்றனர்.  அவர் உயிரிழந்து வெகுநேரமாகி விட்டதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பரத்வாஜ் என்ற அந்த இளைஞர் போதை மருந்துக்கு அடிமையானவர் என்றும் மரணத்தை கொண்டாட வேண்டும் என்ற மன பிறழ்வு நிலையில் இருந்தவர் என்றும் அவரது இணையதளத்தை ஆய்வு மேற்கொண்ட பின் போலீசார் கூறினர்.

இளைஞர்களை வெகுவாக பாதிக்கும் இந்த ஆபத்தான வீடியோவை யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

More articles

Latest article