மாமல்லபுரத்தில் ஜெர்மன் பெண் பலாத்காரம்: குற்றவாளியின் படம் வெளியீடு!

Must read

பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் நபர் வரைபடம்

மாமல்லபுரம்,

ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா சென்ற பெண் ஒருவர் மாமல்லபுரத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக தமிழகத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள்  சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பகுதிக்கு சென்று சுற்றி பார்த்தனர்.

அங்குள்ள விடுதி ஒன்றில்  தங்கியிருந்து பல இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவில் மாமல்லபுரம் விடுதிக்கு வந்து தங்கியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியான லோமன் ஜெனு என்ற இளம்பெண் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சன்பாத் எடுத்துள்ளார்.

கடற்கரையில் தனியாக இருந்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள் அவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அருகில் இருந்த சவுக்குத்தோப்பிற்கு  தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஜெனு, தனது நண்பர்களிடம் கூறியதை தொடர்ந்து மாமல்லபுரம் பொலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதைத்தொடரந்து ஜெனுவுக்கு செங்கல்பட்டு, மற்றும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜெர்மன் தூதரக அதிகாரிகளும் மாமல்லபுரம் சென்று லோமன் ஜெனுவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் விரைவில் நாடு திரும்ப உள்ளார்.

இந்நிலையில், ஜெர்மன் நாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசார் வரைந்துள்ள உத்தேச படம் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பிரச்சினை குறித்து, மாவட்ட எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். மாமல்லபுரம் டி.எஸ்.பி., எட்வர்ட் தலைமையில், திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர், அனுமந்தன், திருப்போரூர் காவல் ஆய்வாளர், ரமேஷ் மற்றும் மாமல்லபுரம், மானாமதி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள் அடங்கிய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

மாமல்லபுரம் கோட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவான, வழிப்பறி மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் புகைப்படங்களை, ஜெர்மன் நாட்டு பெண்ணிடம் போலீசார் காண்பித்துஉள்ளனர்.

போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால் ஒரு சில நாட்களுக்குள் குற்றவாளி கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் வெளிநாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக வெளியான தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More articles

Latest article