நக்சலைட் கன்னிவெடியில் சிக்கி 5 ஆந்திர போலீசார் பலி

Must read

ஐதராபாத்:

ஆந்திரா–ஒடிசா எல்லை பகுதியில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது கன்னிவெடியில் சிக்கி 5 போலீசார் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திரா&-ஒடிசா எல்லையில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோரபுட் மாவட்டத்தில் உள்ள சுங்கி அருகே நக்சலைட் தேடுதல் வேட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகள் வைத்திருந்த கன்னி வெடியில் சிக்கி 5 போலீசார் பலியாகினர். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article