சென்னை:

மிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீப காலமாக சமூக பிரச்சினைகளுக்காக பள்ளி,  கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த போராட்டங்கள் மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தி,, ஜாதி, மத மற்றும் இன ரீதியான போராட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற போராட்டங்கள் அடிக்கடை நடைபெற்று வருவதால்,மாணவர்கள் மத்தியில், மோதல் ஏற்படுவதுடன், சமூக நல்லிணக்கம் கெடுவதாக ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்துள்ளது.

சமீபத்தில் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல கல்லூரிகளில் போராட்டம் நடைபெற்றது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளில் போராட்டங்கள் நடத்த தடை விதிக்கும்படி, உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, பல்கலைகள், கல்லுாரி வளாகங்களில் தர்ணா, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற போராட்டங்களுக்கான தடை, நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக, பல்கலை வளாகங்களில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.