சென்னை,
ர்தா புயல் அருகே நெருக்கி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் உஷார்நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
சென்னை அருகே கும்மிடிப்பூண்டி அருகே இன்று மாலை வர்தா புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சென்னை மற்றும் ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது.
சென்னைக்கு அருகே 180 கிலோ மீட்டர் தொலைவில்தான் புயல் உள்ளது.  புயல் காரணமாக காற்றின் வேகம்  80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில்  இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை மழை பெய்து வருகிறது. காற்றும் அதிகமாக வீசி வருகிறது.
சென்னையில் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதன் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, எண்ணூர், கடலூர், கோவளம், மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது, 50அடி உயரத்துக்கு அலைகள் ஆர்ப்பரிக்கிறது.

பழவேற்காடு பகுதிகளிலும் அதிக காற்றும் மழையும் பெய்து வருகிறது.
பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், போக்குவரத்தை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.