காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் சேவை  நிறுத்தம்

Must read

ஸ்ரீநகர்:

பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

பாராளுமன்ற தாக்குதல்  குற்றவாளிகளுள் ஒருவர் அப்சல் குரு. இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, கடந்த 2013  ஆண்டு ஆம்  ஆண்டு தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் டெல்லி திகார் சிறை வளாகத்தில் புதைக்கப்பட்டு உள்ளது .

அவரது நினைவுதினதம் இன்று. இதன் காரணமாக காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஆகவே  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் ரயில் போக்குவரத்து தற்காலிக மாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த  ஆண்டு மட்டும், பாதுகாப்பு காரணங்களுக்காக 11-வது முறை ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இதே போல கடந்த ஆண்டு 50-க்கும் மேற்பட்ட முறை  பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.

More articles

Latest article