மறைந்த திரைப்பட நடிகரும், இயக்குநருமான மாரிமுத்து (57), நடிகர் பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும், விமல் நடித்த புலிவால் ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார்.

மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள இவர் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்திலும் நடித்திருந்தார்.

சமீபத்திய தொலைக்காட்சி தொடர்களில் குணசேகரன் என்ற வித்தியாசமான வில்லன் கதாபாத்திரம் மூலம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து வரும் ‘எதிர்நீச்சல்’ மெகா தொடரில் நடித்து வருகிறார் மாரிமுத்து.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை தன்வசப்படுத்திய மாரிமுத்துவின் மரணம் குறித்து திரை நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை பதிவிட்டு வருகின்றனர்.

மறைந்த நடிகர் மாரிமுத்துவுடன் நேற்று எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஹரிபிரியா!

“இன்னும் இதை நம்ப முடியவில்லை.. உண்மையான கலைஞனுக்கு முடிவே இல்லை.. எங்கள் இதயங்களில் நீங்கள் என்றும் இருப்பீர்கள்” என்று தனது ஹரிபிரியாவின் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.