டில்லி:

ந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன், ஸ்டீவ் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ள நிலையில், பிசிசிஐயும் ஓராண்டு விளையாட தடை வித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாட ஸ்டீவ் மற்றும் வார்னர் தேர்வாகி உள்ள நிலையில், பிசிசிஐ-ன் தடை காரண மாக அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

சமீபத்தில், கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிகாவுக்கு எதிரான  3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து  அணியின் கேப்டன் ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர்,  பான்கிராப்ட் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க ஆஸ்திரேலிய  பிரதமர் மால்கம் டர்ன்புல், ஆந்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்ட நிலையில், அவர்களை ஓராண்டு விளையாட தடை விதித்தும், அவர்களை உடனே நாடு திரும்புமாறும்  உத்தரவிட்டது.

 

அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் தேர்வாகி உள்ள ஸ்டீவ் மற்றும் வார்னர் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், பிசிசிஐ-யும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை உத்தரவை வரவேற்று,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் சுமித்தும், டேவிட் வார்னரும் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதித்துள்ளது.

மேலும், ஸ்டீவ் சுமித்துக்கு பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, வேறு ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும்,  சன் ரைசர்ஸ் அணியினர், டேவிட் வார்னருக்கு பதிலாக வேறு ஒரு வீரரை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளது.