டில்லி

ந்திய அரசு மற்றும் சட்ட நிர்வாகம் முகநூல் விவரங்களைக் கேட்பது அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகநூலில் கணக்கு வைத்திருப்போர் குறித்த விவரங்களை அந்நிறுவனத்திடம் இருந்து ஏதாவது நாட்டு அரசு பெற வேண்டும் என்றால் அமெரிக்க நிறுவனம் மூலம் பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற வேண்டும்.  அத்துடன் அவசரத் தேவைக்கு நேரடியாகக் கோரிக்கை விடுத்துப் பெற முடியும்.    அந்தந்த நாட்டுச் சட்ட நிர்வாகம் அல்லது அரசு இவ்வாறு விவரங்களைக் கோர முடியும்.

கடந்த 2016 ஆம் வருடம் அனைத்து விவரங்களையும் இந்திய அரசு 1% அளவுக்கு கூட அவசரத் தேவையாக் கேட்கவில்லை.   தற்போது 7% வரை அவசர தேவையாகவே கோரப்படுகிறது.   அதன் பிறகு 2017 ஆம் வருடம் அவசரத் தேவையாக 460 விவரங்கள் தேவை எனக் கோரிக்கை விடப்பட்டது.  அதன் பிறகு அந்த எண்ணிக்கை 2018 ஆம் வருடம் 1478 ஆகி உள்ளது.  இது முந்தைய வருடத்தை விட மூன்று மடங்கு ஆகும்.

இது போல் அவசர விவரம் கேட்கும் நாடுகளில் இந்தியா ஆறாம் இடத்தில் இருந்தது.  சென்ற  வருடம் அவ்வாறு கேட்பது அதிகரித்து மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது.    இந்த வருட முதல் பாதியில் இவ்வாறு 1615 விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.   இதற்கு முந்தைய ஆண்டான 2018 இன் இரண்டாம் பாதியில் மொத்தம் உள்ள 1478 கோரிக்கைகளில் 861 அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு கேட்கப்படும் விவரங்கள் வெறுப்பு பதிவுகள், மதங்களுக்கு எதிரான பதிவுகள். வன்முறை, பிரிவினை, தீவிரவாதம்,  அரசுக்கு எதிரானது ஆகிய பதிவுகளைக் குறித்ததாகும்.    இந்த வருடம் முதல் பாதியில் கேட்கப்பட்ட அவசர விவரங்களில் 488 கோரிக்கைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.

அவசரம் மற்றும் அவசரமின்மை ஆகிய அனைத்தும் இணைந்து இந்திய அரசு விவரம் கேட்ட கோரிக்கைகள் 2015 இல் 10,676 ஆகவும், 2016 இல் 13,613 ஆகவும் 2017 இல் 22,024 ஆகவும் 2018 இல் 37,385 ஆகவும் இருந்துள்ளது.  இந்த வருட முதல் பாதியில் 22,684 கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.