சென்னை,
மிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. போட்டியிட்ட 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்று தனது சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை உயர்த்தி உள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம்  3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, ஏ.கே.போஸ்
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, ரெங்கசாமி,  ஏ.கே.போஸ்

புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்று தமது முதல்வர் பதவியை தக்க வைத்துள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 19-ந்தேதியன்று நடைபெற்றது.
அவரக்குறிச்சியில் அதிகபட்சமாக 81.86 சதவீதமும், திருப்பரங்குன்றத்தில் 71.04 சதவீதமும், தஞ்சாவூரில் 69.41 சதவீத வாக்குகளும் பதிவாகின.
மூன்று தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தன. அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும், தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின்போது முதல் சுற்றிலிருந்தே அதிமுக முன்னிலை வகித்து வந்தது. இறுதியில்  3 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
தஞ்சாவூர்:
தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி 1,01,362 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை  திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதி  74,488 ஓட்டுக்கள் பெற்று பிடித்துள்ளார். பாரதியஜனதா 3,806 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளது. தேமுதிக 1534 வாக்குகள் பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த தொகுதியில், யாருக்கும் வாக்களிக்க விரும்பாமல் நோட்டாவில் மட்டும் 2,295 பேர் பதிவு செய்தனர்.
tj
திருப்பரக்குன்றம்
திருப்பரக்குன்றம்  தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே,போஸ் 1,13,032 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர்  சரவணன் 70,362 பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார். பாரதிய ஜனதா 6,930 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், 4105 வாக்குகள் பெற்று தேமுதிக 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
42,670 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர். வெற்றி பெற்றுள்ளார்.
tp
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றுள்ளார்.  அவர் பெற்றுள்ள மொத்த வாக்குகள் 88,068.  அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி 64,395 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
திமுக வேட்பாளரை விட 23,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாரதியஜனதா 1179 வாக்குகள் பெற்று  3வது இடத்தை பிடித்துள்ளது. தேமுதிக 1070 வாக்குகள் மட்டுமே பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளது.
aravak
இவர்கள் 3 பேரையும் சேர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.